வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் விபரம் மற்றும் தங்கள் கணக்கில் நிலுவையுள்ள தொகையினை உடனுக்குடன் குறுஞ்செய்தி அறிவிப்பு மூலம் (SMS Alert facility) அறிந்து கொள்ள, இதுவரை கைபேசி எண்ணை வங்கியில் பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏ.டி.எம் கார்டு வழங்கும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை கணக்கு வைத்துள்ள கிளையில் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஏ.டி.எம் கார்டு பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள தேவபுரம் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு.என்.கிருஷ்ணராஜ் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமோ பயின்றுள்ளார்.
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 11-07-1980 அன்று பதிவு செய்யப்பட்டு 03-02-1982 முதல் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் 25 கிளைகளுடனும், திருப்பூர் மாவட்டத்தில் 8 கிளைகளுடனும் செயல்பட்டு வருகிறது. தலைமையகம் உட்பட மொத்தமுள்ள 33 கிளைகளில் 13 கிளைகள் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
17.07.2013 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு பொறுப்பேற்று, திரு.என்.கிருஷ்ணராஜ் அவர்கள் தலைவராகவும், 18.05.2018 முதல் திரு. R.ராமதாஸ் அவர்கள் மேலாண்மை இயக்குநராகவும் வங்கியை நிர்வகித்து வருகின்றனர்.