கணக்குகள் மற்றும் புத்தகங்கள் பராமரிப்பு/பதிவு செய்தலுக்கு கணக்கியியல் கோட்பாடுகள்/நடைமுறைகள் தயாரித்தல்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டுறவுத் தணிக்கை முடிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
ஒவ்வொரு தணிக்கை ஆண்டு இறுதியிலும் சட்டபூர்வ தணிக்கை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க நடவடிக்கை எடுத்தல்.
இருப்பு நிலைக் குறிப்பு மற்றும் இலாப நட்டக் கணக்குத் தயாரித்தல்.
சி.ஆர்.ஏ.ஆர்/செயல்படாத ஆஸ்திக் கணக்குகள்/ஒதுக்கீடுகள் தயாரித்து வங்கி நிர்வாக ஆய்விற்குச் சமர்ப்பித்தல்.
கிளைகளில் கணக்குகள் ஒத்திசைவு செய்தலை கண்காணித்தல்.
ஆண்டு இறுதிக் கணக்குகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும்/மீளாய்வு செய்தலும்.
ஆண்டு இறுதிக் கணக்குகள் மேற்கொள்வதற்கும்/அறிக்கைகள் தயாரிப்பதற்கும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
நிர்வாக மற்றும் மூலதன வரவு-செலவுத் திட்டம் தயார் செய்து நடப்பு வருடம் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் உள்ளதா என்பதைப் பரிசீலித்து நிர்வாக அனுமதிக்கு சமர்ப்பித்தல்.
மைய வங்கியியல் தீர்வுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்த உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுதவி மையத்தின் மூலம் மைய வங்கியியல் தீர்வு முறையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் களையப்படுகின்றன.