தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் கிசான் கடன் அட்டைத் திட்டத்தில் கடன் பெற்ற உறுப்பினர்கள் விபத்திற்கு உள்ளானால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசால் மாஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசி திட்டம் செப்டம்பர் 2003 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்ட மத்தியத் கூட்டுறவு வங்கிக்கு இணைக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் தகுதியான அனைத்து கிசான் கடன் அட்டைத் திட்ட உறுப்பினர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு 34313 உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு வசதி அளிக்கப்பட்டுள்ளது.