மகளிர் வளர்ச்சி பிரிவு முக்கிய செயல்பாடுகள்:
வங்கியில் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு 04.10.2010 முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் வங்கியின் தலைமையகம் மற்றும் இதர கிளைகள் மற்றும் கிளைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 227 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கீழ்க்கண்ட கடன் தொடர்பான கோப்புகள் மற்றும் கடன் அனுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.
I. கடன் வகைகள்
சுய உதவிக்குழுக் கடன்
மாற்றுத் திறனாளிக் கடன்
டாப்செட்கோ கடன் (தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்)
டாம்கோ கடன் (தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்)
தாட்கோ கடன் (தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்)
பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு (மத்திய காலக் கடன்)
II.கடன் பெறுதல் மற்றும் பிரிவு அளவில் பராமரிக்கப்படும் கடன் கணக்குகள் விபரம்
ரூ.50000/- வரையிலான மாற்றுத்திறனாளி கடன் தொகைக்கான கடன் மனு பெற்று கிளை மற்றும் சங்கத்திற்கு தலைமையகம் மூலம் கடன் அனுமதித்து பின்னர் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மூலம் மறுநிதி உதவி பெறுதல்.
ரூ.50000/-க்கு மேற்பட்ட கடன் தொகைக்கு இரு கடன் மனுக்கள் பெறப்பட்டு அதில் ஒரு கடன் மனுவினை தலைமையக பரிந்துரையுடன் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி நிதியுதவி பெறப்பட்டு சம்மந்தப்பட்ட கிளை/சங்கங்களுக்கு கடன் அனுமதித்தல்.
டாம்கோ மற்றும் டாப்செட்கோ நிறுவனத்திடமிருந்து கடன் நிதியுதவி பெற்று கிளை மற்றும் சங்கங்களுக்கு கடன் தொகை அனுமதித்தல்.
கிளைகளிடமிருந்து பெறப்படும் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன் தொகைக்கான கேட்புத் தொகையினை சம்மந்தப்;பட்ட நிறுவனங்களுக்கு செலுத்துதல்.
வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு சுய உதவிக்குழுக் கடன், மாற்றுத் திறனாளிக் கடன், டாம்கோ கடன் மற்றும் டாப்செட்கோ கடன் போன்ற கடன்களுக்கு பதிவாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர், இணைப்பதிவாளர் அவர்களால் நிர்ணயிக்கப்படும் குறியீட்டினை வங்கிக் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு தொடர்றுத்துதல்.
கிளைகள் மூலம் வழங்கும் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன்களுக்காக தனி நபர் மற்றும் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற்று அனுப்பப்படும் 'அ' படிவத்தினை வங்கியின் தீர்மான நகலுடன் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு கூர்ந்தாய்வுக் குழுக் கூட்டத்திற்கு அனுப்புதல்.
கிளைகள் மற்றும் சங்கங்கள் மூலம் டாம்கொ கடன்களுக்காக தனி நபர் மற்றும் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற்று அனுப்பப்படும் 'அ' படிவத்தினை வங்கி/சங்கத்தின் தீர்மான நகலுடன் மேலாண்மை இயக்குநர் டாம்கோ சென்னைக்கு அனுப்புதல்.
01.04.2011 முதல் வழங்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளி கடன்களில் முறையாக திருப்பி செலுத்தப்படும் கடன்களுக்கு கிளை மற்றும் சங்க அளவில் வட்டி மானியக் கோரிக்கையினை தொகுத்து தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வட்டி மானியம் பெற்று சம்பந்தப்பட்ட கிளை/சங்கங்களுக்கு வழங்குதல்.
மேற்படி கடன்கள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு கிளை அளவில் பெறப்படும் கோப்பினை பரிசீலித்து துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வங்கியின் தீர்மான நகலுடன் அனுப்பி வைத்தல்.