1 | கடன் வகை | - உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கு நடைமுறை மூலதனம் மற்றும் தனி நபர் கடன்
|
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - மருந்துக்கடை பேக்கரி, பியூட்டி பார்லர், ஜிம், டைலரிங் கடை, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுது பார்த்தல், சலூன் கடை, உணவு உற்பத்திக் கூடம், ஜவுளி உற்பத்தி போன்றவைகளுக்கு கடன் வழங்கப்படும்.
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - கடன் கோருபவர், பிணைதாரர் வங்கி விவகார எல்லையில் நிரந்தரமாகக் குடியிருப்பவராக அல்லது சொந்த வீடு உள்ளவராக இருக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு நிரந்தர வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும்.
- மனுதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், மனுதாரர் மற்றும் பிணைதாரருக்கு 59 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே அசல் மற்றும் வட்டியினை திருப்பி செலுத்தி கடனை முடிவு கட்டுபவராக இருக்க வேண்டும்.
- கடன் பெறுபவர் மற்றும் பிணைதாரர் வங்கியில் இணை உறுப்பினராகச் சேர வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மேல் கடன் பெறக்கூடாது மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிணை நிற்கக்கூடாது.
- 5. கடன் கோருபவர் எந்தவொரு வங்கியிலும் கடன் பெற்று தவணை தவறியவராக இருக்கக் கூடாது.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - சிசு - அதிகபட்சம் ரூ.50,000/- வரை (தனிநபர் ஜாமீன் அடிப்படையில்)
- கிஷோர் - ரூ.50,000/- க்கு மேல் ரூ.5,00,000/- வரை (சொத்து அடமானத்தின் பேரில்)
- டாரன் - ரூ.5,00,000/- க்கு மேல் ரூ.10,00,000/- வரை (சொத்து அடமானத்தின் பேரில்)
|
5 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி.
- தவணை தவறிய கடன்களுக்கு அபராத வட்டி 2 சதவீதம் கூடுதல்
|
6 | ஜாமீன் |
- ஜாமீன் நிற்பவர், கிளையில் ஏற்கனவே அசையாச் சொத்தினை ஈடு காட்டி கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள், வங்கியின் நிரந்தர இட்டு வைப்புதாரர்கள் அல்லது நிரந்தர வருமானம் ஈட்டுபவர்களிடம் ஜாமீன் பெறலாம்.
- ஜாமீன்தாரர் பணியில் உள்ளவர் எனில் கடன் முடியும் காலம் வரை பணியில் உள்ளவராகவும், வேறு மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
|
7 | கடனை திருப்பிச் செலுத்தும் காலம் |
- நடைமுறை மூலதனக்கடன் - 12 மாதங்கள் (ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட வேண்டும்)
- தனி நபர் கடன் - அதிகபட்சம் 60 மாதங்கள்
|
8 | மார்ஜின் |
- காசுக்கடனுக்கு ஒவ்வொரு மாதமும் இருப்பு அறிக்கை வழங்கப்பட வேண்டும். 75 சதவீதம் இருப்பு மதிப்பு நிர்வகிக்கப்பட வேண்டும்.
- காலக்கடனில் 20 சதவீதம் காக்கப்பட வேண்டும்.
|
9 | சேவைக்கட்டணம் |
- ரூ.5/- இலட்சம் வரை சேவைக்கட்டணம் இல்லை.
- ரூ.5/- இலட்சத்திற்கு மேல் ரூ.10/- இலட்சம் வரை 0.50 சதவீதம் + வரி
|
10 | கடன் மனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் |
- ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி அட்டை ஜெராக்ஸ் நகல்
- மனுதாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு வருமானச்சான்று.
- கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரரின் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- வியாபாரம் செய்வதற்கு ஆதாரமான ஆர்.சி அல்லது உள்ளாட்சிகளில் பெற்ற உரிமம் அல்லது நடப்பாண்டுக்கான தொழில் வரி செலுத்திய ரசீது நகல் அல்லது சிறு தொழில் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட காலாவதியாகாத சான்று நகல்
- மனுதாரருடன் கூடிய வியாபாரம் செய்யும் இடத்தின் புகைப்படம் இணைக்க வேண்டும்
- இதர வங்கிகளில் கடன் நிலுவை இல்லை எனச்சான்று.
- வியாபாரம் செய்யும் இடம் வாடகை எனில், வாடகை ஒப்பந்த நகல் (ரூ.50,000/- க்கு மேற்பட்ட கடன்களுக்கு மட்டும்)
- கடன்தாரர் அல்லது ஜாமீன்தாரருக்கு சொந்த வீடு உள்ளதற்கு கடைசியாக செலுத்திய வீட்டு வரி ரசீது நகல்
|