1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - புதிய வீடுகட்ட, புதிய வீடு, பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்க
- கட்டிடம் கட்டி 15 ஆண்டுகளுக்குட்பட்ட வீடு, பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்க
- ஏற்கனவே உள்ள வீடு, பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) விரிவுபடுத்த
- வீடு மேம்படுத்த/புதுப்பிக்க/பழுது பார்க்க
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - விண்ணப்பதாரர் நிரந்தர பணியில் உள்ளவராகவோ/தொழில் செய்யபவர்களாகவோ / தொடர்ந்து நிரந்தர மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் ஏற்கனவே தனது பெயரிலோ அல்லது தனது மனைவி அல்லது குழந்தைகளின் பெயரிலோ வீடு/பிளாட்டுகள் (அடுக்குமாடி குடியிருப்பு) வங்கியின் விவகார எல்லைக்குள் இருத்தல் கூடாது.
- கணவன் மற்றும் மனைவி பெயரில் அல்லது தந்தை மற்றும் மகன், தாயார் மற்றும் மகன், தாயார் மற்றும் மகள், தந்தை மற்றும் மகள் பெயர்களில் கூட்டாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூட்டாக விண்ணப்பிக்கும் கடன்தாரர்கள் தங்களது வாரிசுதாரர்களையும், அடமான பத்திரத்தில் கூட்டாக சொத்து அடமானம் செய்ய வேண்டும். புரோநோட்டில் கூட்டாக கையோப்பமிட வேண்டும்.
- விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், வங்கியின் செயல் எல்லையில் வசிப்பவராகவும், வங்கியின் இணை உறுப்பினராக சேர தகுதியுடைவராகவும் இருக்க வேண்டும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - அதிகபட்ச கடனளவு ரூ.30.00 லட்சம் வரை (ரூபாய் முப்பது இலட்சம்) அனுமதிக்கப்படும்.
- வீடு விரிவுபடுத்த / மேம்படுத்த/பழுதுபார்க்க ரூ.3,00,000/- வரை அனுமதிக்கப்படும்.
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | - ரூ.10 லட்சத்திற்கு உட்பட்டு கோரும் கடனுக்கு - பொறியாளர் திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் தொகை.
- ரூ10 லட்சத்திற்கு மேற்பட்டு கோரும் கடனுக்கு - பொறியாளர் திட்ட மதிப்பீட்டில் 20 சதவீதம் தொகை.
|
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | - வங்கியின் கடன் அனுமதி உத்திரவில் கண்டுள்ள நிபந்தனைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட பின் மனுதாரர் சொந்த நிதியில் முதலில் கட்டிடப்பணி செய்து முடித்ததற்கு பொறியாளர் சான்று சமர்ப்பித்த பின்பும், வங்கிக்கு ஈடுகாட்டும் சொத்தை அடமானம் செய்து கொடுத்த பின்பும் வங்கி அனுமதித்த கடன் தொகையில் முதல் தவணை தொகை 20 சதவீதம் பட்டுவாடா செய்யப்படும்.
- 20 சதவீதம் முதல் தவணை பட்டுவாடா செய்ததற்கு கட்டிட பணி முடித்து பொறியாளர் சான்று பெற்று சமர்ப்பித்த பின்பு இரண்டாவது தவணைத் தொகை 40 சதவீதம் பட்டுவாடா செய்யப்படும்.
- 40 சதவீதம் இரண்டாவது தவணை பட்டுவாடா செய்ததற்கு கட்டிட பணி முடித்து பொறியாளர் சான்று பெற்று சமர்ப்பித்த பின்பு மூன்றாவது தவணைத் தொகை 40 சதவீதம் பட்டுவாடா செய்யப்படும்.
- கட்டிய வீட்டை வாங்கும் பட்சத்தில் ஒரே தவணையில் பொறியாளர் மதிப்பீடு சமர்ப்பித்து கடன்பட்டுவாடா பெறலாம்.
- ஒவ்வொரு தவணை தொகையும் பட்டுவாடா செய்யப்பட்ட பின்பு பட்டுவாடா தொகையை பயன்படுத்தி வீட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு திருப்தி செய்து கொண்டு அடுத்த தவணைத் தொகைகளை பட்டுவாடா செய்யப்படும்.
|
7 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி. தற்போது Floating Rate (EMI/Simple) & Fixed Rate (EMI/Simple) - ல் வழங்கப்படுகிறது.
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | - மனுதாரர் கோரும் வீட்டுவசதிக்கடனின் தவணைக் காலம் மனுதாரர் 70 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திருப்பி செலுத்தப்படும் வகையில் தவணை நிர்ணயிக்கப்படும்.
- கட்டிடம் கட்டி முடித்து பொறியாளர் சான்று (Completion Certificate) பெறப்பட வேண்டும். குடிபுகுந்த உடனோ அல்லது முதல் தவணைத்தொகை பட்டுவாடா செய்த தேதியிலிருந்து 12 மாத காலம் முடிந்தோ இதில் எது முன்னரோ அதிலிருந்து முதல் தவணைக்காலம் நிர்ணயம் செய்யப்படும்.
- கட்டியவீடு மற்றும் பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்கும் பொழுது அடுத்த மாதத்திலிருந்தே தவணைத்தொகையினை செலுத்த வேண்டும்.
|
9 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | -
கடனை திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்கு மிகாமல் ஒவ்வொரு மாதமும் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
|
10 | தவணைத் தொகை செலுத்தும் முறை | -
மாதாந்திர தவணைத்தொகை EMI/Simple முறையில் ஒவ்வொரு மாதமும் பிரதி10-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ திருப்பிச் செலுத்த வேண்டும்.
|
11 | அபராத வட்டி | -
தவணை தவறிய அசலுக்கு கூடுதலாக 2 சதவீத அபராத வட்டி செலுத்தப்பட வேண்டும்.
|
12 | கட்டணங்கள் |
- அனுமதிக்கும் கடன் தொகைக்கு 0.5 சதவீதம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
- குறைந்தபட்சம் ரூ.1500/-ம், அதிகபட்சம் ரூ.7500/-ம் மற்றும் இத்தொகைக்கான சேவை வரியும் வசூலிக்கப்படும்.
- சட்ட ஆலோசகர் கட்டணம் கடன் மனுவுடன் செலுத்த வேண்டும்.
|
13 | கடனுக்கு ஈடு | |
14 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- மனையிடத்தின் அசல் கிரைய ஆவணத்துடன் மூல உரிமை பத்திரங்கள்.
- மனுதாரரின் பெயரில் மனையிடத்தின் மீது பட்டாமாறுதல் வாங்கிய வட்டாச்சியர் உத்தரவு நகல்.
- வட்டாச்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் பெறப்பட்ட கணிப்பொறி பட்டா, சிட்டா (RSR) மற்றும் அடங்கல் பதிவேடு அசல் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
- மனையிடத்தின் புல வரைபடம் (FMB) நகல் ஆவணம்.
- வில்லங்கச் சான்று 30 முழு ஆண்டுகளுக்கு கடன் மனு விண்ணப்பிக்கும் காலம் வரை.
- வீட்டு மனை அங்கீகாரம், கட்டிட அனுமதி மற்றும் வரைபட அங்கீகாரம் (BLUE PRINT) உள்ளுர் திட்டக் குழுமம் / உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒபபுதல் பெற்று இரண்டு நகல்களும் இணைக்கப்பட வேண்டும்.
- பொறியாளர் திட்ட மதிப்பீடு CHARTERED ENGINEER - இடம் பெறப்பட வேண்டும்.
- மனுதாரர்களின் அடையாளச்சான்று, வயது சான்று ஆகியவற்றிக்கு வாக்காளர் அடையாள அட்டை / பாஸ் போர்ட் / ஓட்டுநர் உரிமம் நகல் / வருமான வரி நிரந்தரக்கணக்கு அட்டை நகல் இவற்றில் ஏதாவது ஒன்று இணைக்கப்பட வேண்டும்.
- இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டை நகல்/வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / வருமான வரி நிரந்தரக்கணக்கு அட்டை நகல், சமீபத்திய தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீது, மின்சாரக் கட்டணம் செலுத்திய ரசீது, சொத்து வரி செலுத்திய ரசீது. இதில் ஏதவாது ஒன்று இணைக்கப்பட வேண்டும்.
- சம்பளதாரர் அல்லாத தொழில் செய்வோருக்கு தொழில் செய்யும் நிறுவன முகவரிக்கு சான்று நகல் இணைக்க வேண்டும்.
- சம்பளதாரர்களுக்கு கடைசி மூன்று மாத சம்பளச் சான்று பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பெற்று இணைக்கவேண்டும். ( படிவம் எண் 16)
( இதர வருமானத்திற்கு உரிய படிவத்தில் சான்று தேவை)
- தொழில் செய்பவர்கள்/வியாபாரம் செய்பவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு கடந்த மூன்று வருட வருமானவரி தாக்கல் செய்த படிவம் இணைக்க வேண்டும்.
- விவசாயிகள் மற்றும் இதர நபர்கள் மாத வருமானம் ரூ.10000/- மற்றும் அதற்கு கீழ் இருந்தால் வட்டாசியர்/பட்டைய கணக்காளரிடம் வருமானச்சான்று பெற்று இணைக்க வேண்டும்.
- சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கி கணக்கு கடந்த 6 மாதங்களுக்கு பெற்று இணைக்கப்பட வேண்டும்.
- பிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்கும் பொழுது அசல் ஒப்பந்தம் (பிளாட் கட்டி கொடுப்பவர்களிடம் செய்து கொண்டது) இணைக்கப்படவேண்டும்.
|
15 | காப்பீடு | - வீட்டு வசதிக்கடன் தொடர்பான அனைத்து கடன்களுக்கும் உரிய காப்பீடு கடன்தாரர் பெயர் மற்றும் வங்கியின் பெயர் கூட்டாக சேர்த்து காப்பீடு நிறுவனங்களில் நெருப்பு, வெள்ளம், புயல், பூகம்பம் ஆகியவற்றிற்கு வீடு கட்டி முடிக்கப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் காப்பீடு செய்யப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட கடன் தொகை மற்றும் மேற்படி கடனுக்கு தோராயமாக வசூலிக்கப்பட வேண்டிய வட்டி தொகையும் சேர்த்து காப்பீடு செய்யப்பட வேண்டும்.
- கடன்தாரர் விருப்பினால் கடன்தாரர்கள் இல்லாத சூழ்நிலை (மரணம் அல்லது விபத்து ஏற்பட்டு இருந்தாலோ) காப்பீடு நிறுவனம் கடன் தொகை முழுவதையும் நேர்செய்யுமாறு காப்பீடு நிறுவனம் மூலம் போதிய காப்பீட்டினை கடன்தாரர் செய்து கொள்ளலாம்.
|