1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - விவசாய விளைபொருட்கள் ஈட்டின் பேரில் விவசாயிகளுக்கு
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - வங்கியின் செயல் எல்லையில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அடமானம் செய்பவர்கள்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - ஈடு வைக்கும் சரக்கின் அடக்க விலை அல்லது சந்தை விலை, இதில் எது குறைவோ அந்த மதிப்பில் அதிகபட்சமாக 60 சதவீதம். அதிகபட்சமாக ரூ.5,00,000/- வரை கடன் பெறலாம்.
|
5 | வட்டி விகிதம் | - வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
6 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | - 6 மாதங்கள். சரக்கின் தகுதியின் அடிப்பiடியில் மேலும் 6 மாத காலம் தவணைக் காலத்தை நீட்டிக்கலாம்.
|
7 | தவணைத் தொகை செலுத்தும் முறை | - அசல் மற்றும் தினசரி நிலுவை அடிப்படையில் வட்டி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.
|
|
8 | அபராத வட்டி |
|
9 | கடனுக்கு ஈடு/ஆதாரம் |
- அங்கீகரிக்கப்பட்ட கிட்டங்கி, மாநில அரசு சேமிப்பு கிடங்கு, மத்திய அரசு சேமிப்பு கிடங்கு அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வழங்கிய ரசீதை வங்கி ஈடு செய்து கொள்ளும் வகையில் மேலொப்பம் செய்து வழங்க வேண்டும்.
|
10 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- கடன் உறுதி ஆவணம்
- ஹைபோதிகேசன் பத்திரம்
- சேமிப்புக் கிடங்கு ரசீது
|
11 | காப்பீடு |
- கடன்தாரர் சரக்கு இருப்பு மதிப்பு அளவிற்கு வங்கியின் பெயரையும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.
- கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை இன்சூரன்ஸ் அமுலில் இருக்க வேண்டும்.
- ஒரிஜினல் பாலிசியை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
|
12 | பொது |
- ஈடு வைக்கும் சரக்கு நல்ல நிலையில் தரமுள்ளதாக இருக்க வேண்டும்.
- குடோன் வாடகையினை கடன்தாரரே செலுத்த வேண்டும்.
- சரக்கு கெடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை கடன்தாரர் தன் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.
- கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்திய பின் கடன்தாரர் ஈடு வைத்த சரக்குககள் திருப்பி வழங்கப்படும்.
|