முகப்பு >> திட்டங்கள் >> கடன்கள் >> விவசாயம் அல்லாத கடன் >> அரசு நலத்திட்டக் கடன்கள்
வங்கி கிளைகள் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு கீழ்க்கண்டவாறு கடன்கள் வழங்கப்படுகிறது.
சுழல்நிதிக் காசுக்கடன் (Revolving Fund cash credit)
நேரடிக்கடன் (Direct Linkage)
பொருளாதாரக்கடன; (Economic Activity)
சுய உதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்தும் குழுக்களின் செயல்பாடு அடிப்படையில் தரமதிப்பீடு செய்யப்படுகின்றன. தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் தகுதி பெறும் குழுக்களை தரமதிப்பீடு செய்யும் போது குழுவின் செயல்பாடு, ஒற்றுமை, மற்றும் கணக்கு பதிவேடு பராமரித்தல் போன்றவைகளை பரிசீலினை செய்து, தகுதியின் அடிப்படையில் Form III கையொப்பம் இடப்பட வேண்டும். பின்னர் அரசு சுழல்நிதி மானியாக நகர்புற குழுக்களுக்கு (குழு ஒன்றுக்கு) ரூ. 10,000/- வீதமும், ஊரகப்பகுதி குழுக்களுக்கு (குழு ஒன்றுக்கு) ரூ. 15,000/- வீதமும் வழங்குகிறது. அவ்வாறு வழங்கப்படும் சுழல்நிதி தொகையினை Revolving Fund Subsidy என்ற தலைப்பில் கணக்கு வைத்து பராமரித்து வரப்படும். இந்த தொகையை எக்காரணம் கொண்டும் காசுக்கடன் கணக்கிற்கு வரவு வைக்கப்படமாட்டாது.
ஈரோடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், ஊரகப்பகுதிக்கு ரூ.15,000/- சுழல்நிதி எனும் போது சுழல்நிதியைப் போல் ஐந்து மடங்கு மற்றும் சுழல்நிதியினையும் சேர்த்து ரூ. 90,000/- ம் கடன் வழங்க வேண்டும் எனவும், நகர்பகுதிக்கு சுழல்நிதி ரூ.10,000/- எனில் சுழல்நிதி போல் ஐந்து மடங்கு மற்றும் சுழல்நிதியும் சேர்த்து ரூ.60,000/- ஆக சுழல்நிதி காசுக்கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிக்கு - ரூ. 15000 * 5 + 15000 = ரூ. 75000 + ரூ. 15000 = ரூ. 90000 /-
நகரப் பகுதிக்கு - ரூ. 10000 * 5 + 15000 = ரூ. 50000 + ரூ. 10000 = ரூ. 60000 /-
மேலும் சுயஉதவிக்குழுவுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் அளவுக்கு உட்பட்டு காசுக்கடன் தொகை பெற அனுமதிக்கப்படும். சுழல்நிதி காசுக்கடனுக்கு வட்டி கணக்கிடப்படும் பொழுது காசு கடன் தினசரி நிலுவையில் சுழல்நிதி தொகையை கழித்து மீதி உள்ள நிலுவை தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும். சுழல்நிதிக்காசுக்கடனில் கடன் பெறும் தகுதிக்கு உட்பட்டு அவ்வப்போது தொகை பெற்றுக் கொள்ளவும், செலுத்தவும் அனுமதிக்கப்படும். குழு உறுப்பினர்களிடமிருந்து வசூலாகும் தொகையை காசுக்கடனில் வட்டியுடன் இருசால் செய்யப்பட வேண்டும். சுழல் நிதிகாசுக் கடனில் முறையாக வரவு செலவு செய்யாத குழுக்களின் சுழல் நிதிகாசுக் கடன் நிலுவை முழுவதும் வட்டியுடன் வசூலிக்கப்படும். நல்ல முறையில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதிக்கடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மேலும் சுழல் நிதி தொகையினை Revolving Fund Subsidy என்ற தலைப்பின் கீழ் கணக்கு வைத்து பராமரித்து வரப்படும். இத்தொகையை எக்காரணம் கொண்டும் சுழல்நிதிக் காசுக்கடன் கணக்குக்கு வரவு வைக்கப்படமாட்டாது.
ஒவ்வொரு ஆண்டும் சுய உதவிக்குழுக்கள் சுழல் நிதி காசுக் கடன் கணக்கினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
சுய உதவிக்குழு தர மதிப்பீடு செய்யப்பட்டு சுழல் நிதி கிடைக்க பெறாத நல்ல முறையில் செயல்படும் சுயஉதவிக்குழுக்களுக்கும் ஏற்கனவெ சுழல்நிதிக்கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்தியுள்ள சுய உதவிக்குழுக்களுக்கும் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நேரடிக்கடன் பின்வருமாறு வழங்கப்படும்.
வ. எண் | சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கும் நேரடிக்கடனின் விபரம் கடன் | தொகையின் அளவு (ரூபாயில்) | கடன் கால அளவு | வட்டி விகிதம் | ||
---|---|---|---|---|---|---|
1. | முதல் முறை | ரூ.1,00,000/- வரை | 12 மாத சம தவணைகள் | 13.50 சதவீதம் | ||
2. | இரண்டாம் முறை | ரூ.1,50,000/- வரை | 12 / 36 மாத சம தவணைகள் | 13.50 சதவீதம் | ||
3. | மூன்றாம் முறை மற்றும் அதற்கு மேலும் | குழுவிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை |
| 13.50 சதவீதம் |
இக்கடன் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் குழுவிலுள்ள நபர் ஒருவருக்கு ரூ.25,000/-க்கு உட்பட்டும் ரூ.5,00,000/- வரையும் பொருளாதாரக்கடன் வழங்கப்படும்.
மேலும் பொருளாதாரக்கடன் தொகை மானியத்தை போன்று மூன்று மடங்கு அளவு இருக்க வேண்டும். (அதாவது குறைந்த பட்சம் மகளிர் சுயஉதவிக்குழுவின் எண்ணிக்கை 12 என இருக்கும்போது தகுதியான மானியம் ரூ.1,20,000/- (ஒரு பங்கு) எனில் கடன் தொகை ரூ.3,60,000/- (3 பங்கு) ஆக மொத்தம் ரூ.4,80,000/- க்கு உட்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுதல் வேண்டும். குழுவின் எண்ணிக்கை 13 அல்லது 20 என இருக்கும் போது தகுதியான மானியம் ரூ.1,25,000/- (ஒரு பங்கு) அதற்கு இணையான கடன் தொகை ரூ.3,75,000/- (மூன்று பங்கு) ஆக மொத்தம் ரூ.5,00,000/- க்கு உட்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன் தான் வழங்கப்படும்.
குழுக்களின் செயல்பாடுகள் நல்லமுறையில் உள்ளதையும் ஏற்கனவே வழங்கப்பட்ட சுழல்நிதி கடன் மற்றும் நேரடிக்கடன் தவணை தவறாமல் செலுத்தப்பட்டுள்ளதை திருப்தி செய்து கொண்டு கடன் அனுமதிக்கப்படும்.