1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - பெருமளவு வியாபாரம்
- சிறு வியாபாரம்
1. ஜவுளி உற்பத்தி மற்றும் துணி வியாபாரம் ( கட்பீஸ் கடை)
2. மளிகைக்கடை வியாபாரம்
3. தளவாட சாமான்கள் தயாரிப்பு மற்றும் மெத்தை தயாரிப்பு
4. பூ வியாபாரம், பழ வியாபாரம், காய்கறி வியாபாரம்
5. பால் வியாபாரம்/பேக்கரி வியாபாரம்
6. சிற்றுண்டி மற்றும் டிபன் கடை அபிவிருத்தி
7. டைலரிங் தொழில்
8. பழைய இரும்பு வியாபாரம்
9. பிரிண்டிங் மற்றும் பைண்டிங் தொழில்
10. மருந்துக்கடை தொழில்
11. சென்ட்ரிங் மற்றும் கார்பெண்டர் தொழில்
12. பேன்சி ஸ்டொர் தொழில், ஜெராக்ஸ், ஸ்டேஷனரி வியாபாரம்
13. போட்டோ ஸ்டுடியோ, வீடியோ கவரெஜ், எலக்ட்ரிக்கல் வியாபாரம்
- பதிவுசெய்யப்பட்ட புரொநோட்டின் பேரில் பெற்ற முன்கடனை திருப்பி செலுத்துதல்
- வீடு பெருமளவு பழுது பார்த்தல்/புதுப்பித்தல்
- மகன், மகள் திருமண காரியம்
- குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சை
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், வங்கியின் செயல் எல்லையில் வசிப்பவராகவும், வங்கியின் இணை உறுப்பினராக சேர தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும்.
- அடமானம் வைக்கப்படும் சொத்து வங்கியின் செயல் எல்லைக்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் நிரந்தர பணியில் உள்ளவராகவோ/தொழில் செய்யபவர்களாகவோ தொடர்ந்து நிரந்தர மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
- சொந்தமாக வில்லங்கமில்லாத வீடு (RCC ROOF) / வணிக வளாகம் / இதர கட்டிடங்கள் உள்ளவர்கள் இக்கடன் விண்ணப்பிக்கலாம்
- சொத்து அடமானத்தில் பேரில் வாங்கப்படும் கடன்களுக்கு ஈடுகாட்டும் சொத்து மதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர் பெயரில் உள்ள தேசிய சேமிப்பு பத்திரம் / கிசான்விகாஸ் பத்திரம் / ஈடுகாட்டும் வீட்டு இடத்துடன் கூடிய காலி இடம் ஆகியவற்றை கூடுதலாக ஈடு காட்டலாம். தனியாக காலியிடம் மற்றும் விவசாய பூமி ஆகியவற்றை ஈடு காட்ட எடுத்துக்கொள்ளக் கூடாது.
- மனுதாரர் மொத்த மாத வருமனத்தில் இக்கடனுக்கான பிடித்தம் மூன்றில் ஒரு பங்குக்கு (1/3) உட்பட்டு இருக்க வேண்டும்.
- கடன் கோருபவர்கள் 55 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில் அவரது சட்டபூர்வ வாரிசுகளையும் சேர்த்து கடன் மனு விண்ணப்பித்து அடமானம் பதிவு செய்து கொடுக்க வேண்டும். வயதான தாய், தந்தை மற்றும் திருமண வயதில் உள்ள மகள் ஆகியோர்களின் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - வங்கியால் அங்கீகிக்கப்பட்ட பொறியாளர் மதிப்பீட்டில் 60% உட்பட்டும், மாத தவணை மொத்த வருமானத்தில் 1/3 பங்குக்கு உட்பட்டு அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரை அனுமதிக்கப்படும்.
|
5 | மனுதாரரின் சொந்த நிதி | |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | |
7 | வட்டி விகிதம் |
- வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
8 | தவணைக் காலம் நிர்ணயம் | - கடனை திருப்பி செலுத்தும் காலம் 10 ஆண்டுகள்.
|
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை |
- EMI திட்டத்தின் மூலமும், சாதாரண வட்டி மூலமும் கடனை திருப்பி செலுத்தலாம்.
|
10 | அபராத வட்டி |
- தவணை தவறிய அசலுக்கு கூடுதலாக 2 சதவீத அபராத வட்டி செலுத்தப்பட வேண்டும்.
|
11 | கட்டணங்கள் |
- விண்ணப்பதாரர் கடன்மனு சமர்ப்பிக்கும்பொது கடன் தொகையில் 1 சதவிகிதம் (குறைந்த பட்சம் ரூ.500/-ம், அதிகபட்சம் ரூ.1500/-ம் ஆகும்) கடன் மனு பரிசீலனை கட்டணமாக தொகை செலுத்த வேண்டும். இத்தொகை திரும்ப அளிக்கப்படமாட்டாது. இத்தொகைக்கு சேவை வரியும் செலுத்த வேண்டும்.
|
12 | கடனுக்கு ஈடு |
- வீடு மற்றும் வீட்டுடன் கூடிய இடம்
|
13 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- மனையிடத்தின் அசல் கிரைய ஆவணத்துடன் மூல உரிமை பத்திரங்கள்.
- மனுதாரரின் பெயரில் மனையிடத்தின் மீது பட்டா மாறுதல் வாங்கிய வட்டாச்சியர் உத்தரவு
- நகல்.
- வட்டாச்சியர் அலுவலகத்தில் மனுதாரர் பெயருடன் பெறப்பட்ட கணிப்பொறி பட்டா, சிட்டா (RSR) மற்றும் அடங்கல் பதிவேடு அசல் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற மனையிடத்தின் புல வரைபடம் (FMB) நகல் ஆவணம்.
- வில்லங்கச் சான்று 15 முழு ஆண்டுகளுக்கு கடன் மனு விண்ணப்பிக்கும் காலம் வரை.
- வீட்டு மனை அங்கீகாரம் கட்டிட அனுமதி மற்றும் வரைபட அங்கீகாரம் (BLUE PRINT) உள்ளுர் திட்டக் குழுமம் / உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்று இரண்டு நகல்களும் இணைக்கப்பட வேண்டும்.
- வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட சார்ட்டர்டு பொறியாளர் கட்டிட மதிப்பீடு இரண்டு நகல் இடம் பெறப்பட வேண்டும்.
- மனுதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, வயது சான்று ஆகியவற்றிக்கு வாக்காளர் அடையாள அட்டை/பாஸ் போர்ட் / ஓட்டுநர் உரிமம் நகல் / வருமான வரி நிரந்தரக்கணக்கு அட்டை நகல் இவற்றில் ஏதாவது ஒன்று இணைக்கப்பட வேண்டும்.
- இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டை நகல் / வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / வருமான வரி நிரந்தரக்கணக்கு அட்டை நகல், சமீபத்திய தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீது, மின்சாரக் கட்டணம் செலுத்திய ரசீது, சொத்து வரி செலுத்திய ரசீது. இதில் ஏதவாது ஒன்று இணைக்கப்பட வேண்டும்.
- தொழில் மற்றும வியாபாரம் செய்ய கடன் கோருபவருக்கு தொழில் செய்யும் நிறுவன முகவரிக்கு சான்று நகல் இணைக்க வேண்டும்.
- சம்பளதாரர்களுக்கு சம்பளச் சான்று பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பெற்று இணைக்கவேண்டும். சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கி கணக்கு கடந்த 6 மாதங்களுக்கு பெற்று இணைக்கப்பட வேண்டும்.
- தொழில் செய்பவர்கள்/வியாபாரம் செய்பவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு கடந்த மூன்று வருட வருமானவரி தாக்கல் செய்த படிவம் இணைக்க வேண்டும்.
- மாத வருமானம் ரூ.10,000/- வரை வட்டாசியர்/பட்டைய கணக்காளரிடம் தொழில் விவரம் வருமானச்சான்று பெற்று இணைக்க வேண்டும்.
- மனை இடத்திற்கு அரசு வழிகாட்டி மதிப்பு கடந்த மூன்றாண்டு சராசரி மதிப்பு பெற்று இணைக்கப்பட வேண்டும்.
- உள்ளாட்சி / பேரூராட்சி / நகராட்சிக்கு செலுத்திய சொத்துவரி, குடிநீர் வரி, வீட்டுவரி நடப்பு ஆண்டிற்கு செலுத்திய இரசீது இணைக்கப்பட வேண்டும். மின்சார கட்டணம் சென்ற மாதத்திற்கு செலுத்திய இரசீது நகல் இணைக்கப்பட வேண்டும்.
- வியாபார காரியத்திற்கு கடன் கோரப்படுமானால் வியாபார நடைபெறுவதற்கான தொழில் வரி இரசீது நடப்பு ஆண்டிற்கு செலுத்தியது இணைக்கப்பட வேண்டும்.
|
14 | காப்பீடு | - அடமான சொத்து தீ/வெள்ளம்/புயல் மற்றும் கலவரம் ஆகியவைகளினால் ஏற்படக் கூடிய நட்டங்களை ஈடுகட்டும் வகையில் கடன்தாரர் மற்றும் வங்கியின் பெயரில் கூட்டாக காப்பீடு செய்ய வேண்டும். கடன் முழுமையாக செலுத்தப்படும் வரை பாலிசி ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்க ஆகும் செலவினை மனுதாரரே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் வங்கியே காப்பீடு பிரிமியத்திற்கு ஆகும் செலவினை செலுத்தி இத்தொகையினை கடன்தாரரிடமிருந்து வசூல் செய்யும்.
|