1 | கடன் வகை | |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | - குடும்பத் தேவைகளை நிறைவு செய்ய
|
3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | - அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள், குவாசி அரசு நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறை நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள்
- இக்கடனுக்கு ஏற்படும் பிடித்தமும் சேர்த்து மொத்த சம்பயத்தில் 50 சதவீதத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
- கடன்தாரர் மற்றும் பிணையதாரர் வங்கியின் இணை உறுப்பினராக வேண்டும்.
|
4 | அனுமதிக்கும் கடனின் அளவு | - மொத்த சம்பளத்தில் இக்கடனுக்கு ஏற்படும் பிடித்தம் சேர்த்து 50 சதவீதத்திற்கு மிகாமல் அல்லது ரூ. 3,00,000/-. இதில் எது குறைவோ அத்தொகை கடனாக அனுமதிக்கப்படும்.
|
5 | வட்டி விகிதம் |
- வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
|
6 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் |
|
7 | அபராத வட்டி |
- தவணை தவறிய அசலுக்கு கூடுதலாக 2 சதவீத அபராத வட்டி செலுத்தப்பட வேண்டும்.
|
8 | கடனுக்கு ஈடு |
- கடன்தாரர் மற்றும் பிணையதாரர் கூட்டாகச் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் கடன் உறுதி ஆவணம்.
|
9 | வழங்க வேண்டிய ஆவணங்கள் |
- விண்ணப்பதாரர் மற்றும்பிணைதாரருக்கு அனைத்துப் பிடித்தங்கள் விவரத்துடன் சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் (Pray Drawing Officer) பெறப்பட்ட சம்பளச்சான்று.
- சம்மந்தப்பட்ட பணியாளர் சங்கம் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடம் கடன் நிலுவையில்லை சான்று.
- கடன் தொகையினை பிடித்தம் செய்த கொடுக்க சம்பளப்பட்டுவாடா அலுவலரின் உறுதி மொழிக் கடிதம்.
- விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஒப்பந்தக்கடிதம்.
- சம்பளப்பட்டுவாடா அதிகாரியின் அத்தாட்சியுடன் கூடிய புகைப்படம்.
- கடன்தாரர் மற்றும் பிணையதாரர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, பணியிலிருந்து ஓய்வு பெறும் தேதி குறிப்பிட்ட சம்பளப்பட்டுவாடா அதிகாரியின் சான்று.
- கடன் பெறும் சம்மந்தப்பட்ட பணியாளர் மீது சங்கத்தில் வழக்கு, குற்றச்சாட்டு நடவடிக்கை, குற்றவியியல் நடவடிக்கை, சர்சார்ஜ், தண்டத்தீர்வை ஏதுமில்லை என்பதற்கான தனி அலுவலர் / மேலாண்மை இயக்குநரின் சான்று.
- கடன்தாரர் மற்றும் பிணையதாரர் இருப்பிட முகவரிச் சான்று இணைக்கப்பட வேண்டும்.
|