தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அமுல்படுத்தியதன் மூலம் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டிற்கு 16306 நபர்களுக்கு காப்பீட்டு பிரீமியமாக தொகை ரூ.3.28 கோடி வசூல் செய்யப்பட்டு செலுத்தப்பட்டுள்ளது.
2015-16 ஆம் ஆண்டில் பயிர் மகசூலில் ஏற்பட்ட தொய்விற்கு பயிர் இழப்பீட்டுத் தொகையாக 10591 நபர்களுக்கு ரூ.7.39 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.