முகப்பு >> திட்டங்கள் >> கடன்கள் >> விவசாயம் அல்லாத கடன் >> அரசு நலத்திட்டக் கடன்கள்
கடன் விண்ணப்பப் படிவங்கள் சென்னையில் உள்ள டாப்செட்கோவின் பதிவு பெற்ற அலுவலகம் (அல்லது) சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அல்லது) கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும்.
சில்லறை வியாபாரிகள் மற்றும் வியாபாரம்
போக்குவரத்து
விவசாயம்
கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள்
பிற்படுத்தப்பட்டோர் - (Backward community)
மிகப்பிற்படுத்தப்பட்டோர் - (Most Backward Community)
சீர்மரபினர் - (Denotified Community)
குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.81,000/- க்கும், நகர்ப்புறங்களில் ரூ.1,03,000/- க்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
பயனடைவோரின் வயது 18 க்கு மேல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
1 | சாதிச்சான்றிதழ் பள்ளிச்சான்றிதழ் |
2 | வருமானச்சான்று |
3 | இருப்பிடச்சான்று |
4 | குடும்ப அட்டை நகல் |
5 | திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்) |
6 | முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி |
7 | ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) |
8 | இதர வங்கிகளில் கடன் பாக்கி இல்லை சான்று |
10 | தொழில் செய்யவுள்ள இடம் வாடகை இடமாயின் வாடகை ஒப்பந்த பத்திரம் |
11 | 'அ' படிவம் 3 நகல்கள் |
ஆ வங்கி கோரும் ஆவணங்கள் | |
கடன் தொகை ரூ. 25,000 /-க்கு உட்பட்டிருந்தால் | |
(1) ஒரு நபர் ஜாமீன் | |
(2) ஜாமீன் அளிப்பவரின் சம்மதக் கடிதம் | |
இ | கடன் தொகை ரூ.25,000/-க்கு மேற்பட்டு ரூ.50,000/-க்கு உட்பட்டு இருப்பின் |
(1) இரு நபர் ஜாமீன் | |
(2) ஜாமீன் அளிப்பவரின் சம்மதக் கடிதம் | |
ஈ | கடன் தொகை ரூ. 50,000/-க்கு மேற்பட்டு இருப்பின் |
(1) கடன் தொகை போல் இருமடங்கு சொத்து ஜாமீன் அளிக்க வேண்டும். ஜாமீன் அளிக்கும் சொத்து மனுதாரர் பெயரில் இருக்க வேண்டும். ஜாமீன் அளிக்கும் சொத்தானது கான்கிரீட் வீடு, கடை போன்றவைகளாக இருக்க வேண்டும். | |
(2) சொத்திற்கான பத்திரம் நகல் | |
(3) மூலப்பத்திரம் நகல் | |
(4) சொத்து மதிப்புச் சான்று வட்டாட்சியரிடம் பெறப்பட வேண்டும். | |
(5) வில்லங்கச் சான்று 30 வருடங்களுக்கு இணைக்கப்பட வேண்டும். | |
(6) சட்ட ஆலோசகர் கருத்துரை | |
(7) வீட்டுவரி இரசீது |
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பொருத்தவரை அந்தந்த சங்கங்களில் கடைபிடிக்கும் கடன் நிபந்தனைகளை பூர்த்தி செய்து கடன் வழங்க வேண்டும்.
கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், வங்கியால் பரிசீலனை செய்யப்பட்டு, பயனாளியின் திட்டத்தின் செயல்பாடு, தன்மை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து ஆய்வு செய்து தகுதிகளின் அடிப்படையில் கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் பரிந்துரை (”அ” படிவம்) மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு பரிசீலனை செய்து டாப்செட்கோ நிறுவனத்திற்கு கடன் வழங்க ”அ” படிவத்துடன் பரிந்துரை செய்யப்படும். பரிந்துரையின் பேரில் டாப்செட்கோ நிறுவனம் கடன் தொகையினை சம்பந்தப்பட்ட வங்கிக்கு வழங்கிய பின்னர் வங்கி சம்பந்தப்பட்ட பயனாளிக்கு கடன் வழங்கும்.
பொதுக்கடன் திட்டம்
ஆவின் மூலம் கறவை மாடுகள் வாங்க கடன் திட்டம்
தொழில் முனைவோர் பயிற்சிப் பெற்ற மகளிருக்கு கடன் வழங்கும் திட்டம்
மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம்
மகளிர்களுக்கான புதிய பொற்காலத் திட்டம்
நடமாடும் சலவையகம் அமைக்க கடன் வழங்கும் திட்டம் மற்றும்
போக்குவரத்து வாகனம் வாங்க கடன் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மளிகைக்கடை, மருந்தகம், மிதிவண்டி நிலையம் போன்ற பல்வேறு தொழில்களை தொடங்க கடன் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச கடன் தொகை : ரூ. 1 /- இலட்சம்
வட்டி விகிதம் : 6 சதவீதம்
திருப்பிச் செலுத்தும் காலம் : 5 ஆண்டுகள் (20 காலாண்டு சமதவணைகளில்)
ரூ.1/- இலட்சத்திற்கு மேற்பட்டு ரூ.5/- இலட்சம் வரை கடன் கோரும் இனங்களில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கழகத்தின் முன் அனுமதி பெற்று கடன் வழங்கப்படும்.
கறவை மாடுகள் வாங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களிலிருந்து மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் தெரிவு செய்யும் நபர்களுக்கு ஒரு உறுப்பினருக்கு 2 மாடுகள் வழங்கப்படுகிறது. மேலும் பொதுக்கடன் திட்டத்தின் மூலமும் கறவை மாடுகள் வாங்க கடன் உதவி வழங்கப்படுகிறது.
அதிகபட்ச கடன் தொகை : இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ. 30,000 /-, ஒரு கறவை மாடு வாங்க ரூ. 15,000 /- வழங்கப்படும்
வட்டி விகிதம் : 6 சதவீதம்
திருப்பிச் செலுத்தும் காலம் : 3 ஆண்டுகள் (12 காலாண்டு சம தவணைகளில்)
தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்ற மகளிருக்கு கடன் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச கடன் தொகை : ரூ. 10,000/-
வட்டி விகிதம் : 6 சதவீதம்
திருப்பிச் செலுத்தும் காலம் : 3 ஆண்டுகள் (12 காலாண்டு சம தவணைகளில்)
இத்திட்டத்தின் கீழ் (பெண்/ஆண்) சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ளவருக்கு பூக்கடை, இட்லிக்கடை, பெட்டிக்கடை போன்ற சிறுவணிகம் செய்யும் ஒரு பயனாளிக்கு ரூ. 2,000/- முதல் ரூ. 25,000/- வரை வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம் : 4 சதவீதம் (பெண்களுக்கு)
வட்டி விகிதம் : 5 சதவீதம் (ஆண்களுக்கு)
திருப்பிச் செலுத்தும் காலம் : 3 ஆண்டுகள் (12 காலாண்டு சம தவணைகளில்)
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிருக்கு ஆண்டு வருமானம் கிராம புறமாயின் ரூ.20,000/-க்கும் நகர்ப்புறமாயின் ரூ. 27,500/-க்கும் மிகாமல் இருப்பின் தொழில் தொடங்க உயர்ந்த பட்சமாக கடன் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச கடன் தொகை : ரூ. 50,000/-
வட்டி விகிதம் : 4 சதவீதம்
திருப்பிச் செலுத்தும் காலம் : 3 ஆண்டுகள் (12 காலாண்டு சம தவணைகளில்)
இத்திட்டத்தின் கீழ் தலா ஒரு நபருக்கு மானியத்துடன் கூடிய கடன் ரூ. 5,000/- வழங்கப்படுகிறது (மானியம் ரூ. 2,000/-, டாப்செட்கொ கடன் ரூ. 3,000/-)
அதிகபட்ச கடன் தொகை : ரூ. 5,000/-
வட்டி விகிதம் : 6 சதவீதம்
திருப்பிச் செலுத்தும் காலம் : 2 ஆண்டுகள் (8 காலாண்டு சம தவணைகளில்)
போக்குவரத்து வாகனம் (கார்/வேன்/மினிவேன்/டிராக்டர்/டிரெய்லர் கடன் வழங்கப்படுகிறது.)
அதிகபட்ச கடன் தொகை : ரூ. 3,13,000/-
வட்டி விகிதம் : 10 சதவீதம்
திருப்பிச் செலுத்தும் காலம் : 5 ஆண்டுகள் (20 காலாண்டுகள் சம தவணைகளில்)
கடனை முழுமையாக தவணை தேதியில் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
தவணை தவறிய கடனுக்கு கூடுதலாக 5% அபராத வட்டி வசூலிக்கபடும்.