தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளில் பயிர்க்கடன் வாங்கி உரிய தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்திய 57118 விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டிச் சலுகைத் தொகை ரூ.43.07 கோடி தமிழக அரசிடமிருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி சொந்த நிதி மூலம் சங்கங்களின் நலன் கருதி ரூ.27.99 கோடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மூலம் வரவேண்டிய நிலுவை உள்ளது.