நிதிசார் கல்வி மையம்:

  • தமிழகத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் சிறந்த வங்கியாக நபார்டு வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் தான் முதன் முதலாக நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின் படி, முதலாவது நிதிசார் கல்வி மையம் (Financial Literacy Centre) 05.02.2014 ஆம் தேதியில் ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்த மையம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பஜார் கிளையின் முதல் தளத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
  • இரண்டாவது நிதிசார் கல்வி மையம் (Financial Literacy Centre) 25.07.2016 ஆம் தேதியில் ஆரம்பிக்கப்பட்டு, இந்த மையம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் காங்கயம் கிளையில் செயல்பட்டு வருகிறது.

நோக்கங்கள் மற்றும் சேவைகள்:

  • அனைத்து கிராம மக்களையும், குறைந்த வருமானம் உள்ள அடித்தட்டு மக்களையும் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள் துவங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
  • கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் வழங்குதல்.
  • சேமிப்பு, கடன்கள் இட்டு வைப்பு மற்றும் காப்பீடு போன்ற நிதித் துறை சேவைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
  • கடன் பெறுதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல் பற்றிய பொறுப்புகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
  • அனைத்து பொது மக்களுக்கும் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

விளம்பரப்படுத்துதல்:

  • மக்கள் அதிகம் கூடும் தினசரி காய்கறி மார்க்கெட், சந்தைகள், திருவிழாக்கள், உழவர் மன்றங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று பதாகைகள் மற்றும் தட்டிகள் வைத்தும் விளம்பரங்கள் செய்தும், கூட்டங்கள் நடத்தியும், ஒலிபெருக்கி மூலம் விளக்கவுரை ஆற்றுவதன் மூலமும், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய முறையில் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆலோசகர் பயிற்சி:

  • நிதிசார் கல்வி மையத்தினை சிறப்பாக நடத்திட கல்வி மைய ஆலோசகர் மங்களூரில் உள்ள Bankers Institute of Rural Development (BIRD) பயிற்சி நிலையத்தில் Trainers Training Programme for FLC Counsellors of Coop Banks and RRBS பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்துள்ளார்.

நிதி சார் கல்வி மைய்யம் தொடர்புக்கு

வ. எண் அலுவலர்கள் தரைவழி தொலைபேசி எண்
1 திரு ஆர் லோகமுத்து 94869 55222
2 திரு பி தர்மலிங்கம் 98429 45759