கடன் திட்டத்தின் பெயர் சிறு வியாபாரக்கடன் (Bussiness Loan)
கடன் தவணைக் காலம் 36 மாதங்கள் (3 வருடம்) வரை
கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/-
வட்டி விகிதம் 11.50%
கடன் பெற தகுதி பெற்றவர்கள் வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் வியாபாரம் செய்யும் மற்றும் வியாபாரம் செய்யவுள்ள அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் சிறுவியாபாரம்
வயது 18 வயது முதல் 70 வயது வரை
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. ஜாமீன் நிற்பவர் அரசு ஊழியர்கள் அல்லது புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்கள் அல்லது கிளையில் ஏற்கனவே அசையாச் சொத்தினை ஈடு காட்டி கடன் பெற்றுள்ள வாடிக்கையாளார்கள் அல்லது ஏற்கனவே கிளையில் கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது நிரந்தர வருமானம் ஈட்டுபவர்கள் ஆகியோர்களின் ஜாமீன் பெற்று கடன் வழங்கப்படும்.
  2. கடன் கோருபவர் அல்லது பிணைதாரருக்கு வங்கி விவகார எல்லையில் சொந்த வீடு இருக்க வேண்டும்.
  3. கடன் கோரும் ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
  4. வியாபாரம் செய்வதற்கு ஆதாரமாக தொழில் உரிமம் அல்லது தொழில் வரி செலுத்திய இரசீது கடன் மனுவுடன் இணைக்க வேண்டும்.
  5. ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடன் வழங்கப்படமாட்டாது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜாமீன் நிற்பதை ஏற்கப்படமாட்டாது. இரு நபர்களுக்கு இரு கடன்களாக எதிர் எதிர் ஜாமீன் நின்று கடன் வழங்கப்படமாட்டாது.
  6. வியாபாரம் /தொழில் செய்யும் இடம் வாடகையாக இருந்தால் கடன் முடியும் காலம் வரை வாடகை ஒப்பந்தம் கடன் மனுவுடன் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
  7. வங்கியில் ஏற்கனவே அசையாச் சொத்து ஈட்டின் பேரில் கடன் பெற்ற வாடிக்கையாளர்குளுக்கு அக்கடன்கள் நிலுவையில் இருக்கும் போது வியாபாரக்கடன் அனுமதிக்கப்படமாட்டாது. திருமணம் ஆகாத நபர்களுக்கு கடன் வழங்கும் போது கடன்தாரரின் தந்தையும் கூடுதலாக கடன் மனுதாரராக சேர்க்க வேண்டும்.
  8. வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்
  9. Credit Information Companies ல் விண்ணப்பத்தாரா¨ன் Credit score மற்றும் முன் கடன் குறித்த விவரங்கள்
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது