கடன் திட்டத்தின் பெயர் கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம் வாங்க
கடன் தவணைக் காலம் 60 மாதங்கள்
கடன் அதிகபட்சத் தொகை
 1. இருசக்கரம்/ மகிழுந்து வாங்க வாகனத்தின் சாலைப் பயன்பாட்டிற்கு தயார்நிலைக்கான தொகையில் (on road price) அதாவது exshowroom விலை, பதிவுக்கட்டணம், சாலைவரி, காப்பீடு, உதிரிபாகம் மற்றும் வரிகள் உட்பட 90% கடனாக வழங்கப்படும்.
 2. கடன்தாரர் கடனைத்திருப்பிச் செலுத்தும் தகுதிக்குட்பட்டு இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரையிலும், மகிழுந்துக்கு அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.
 3. எஞ்சிய தொகையை / 10% தொகையை கடன்தாரர் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
 4. கடன் தொகை மற்றும் கடன்தாரர் செலுத்தும் சொந்தநிதி இரண்டையும் சேர்த்து விலைப்புள்ளி கொடுத்துள்ள நிறுவனத்திற்கு வரைவோலை (Demand Draft) / பணம் செலுத்த உத்தரவு (Pay order) / RTFS / NEFT மூலம் வங்கியே நேரடியாக வழங்கும்.
வட்டி விகிதம் கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக்குழு(Asset Liability Committee ALCO) மூலம்நிர்ணயம் செய்யப்படும்.
கடன் பெற தகுதி பெற்றவர்கள்
 1. கூட்டுறவு வங்கிகளில் சம்பளக்கணக்கை பராமரிக்கும் (maintaining salary account with cooperative banks) பணியாளர்கள் (அரசு/பொதுத்துறை/தனியார்) மற்றும்  ஓய்வூதியதாரர்கள் (அரசு/பொதுத்துறை/தனியார்).
 2. கடன் மதிப்பீடு உயர்தரமாக (Credit Score - High) இருக்கவேண்டும்.
 3. வங்கிக்கிளையின் செயற்பாட்டுப்பகுதியில் குடியிருக்க வேண்டும்.
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் சொந்த உபயோகத்திற்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
 1. அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்து விலைப்புள்ளி பெற்று கடன் மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
 2. பணிபுரியும் நிறுவனத்திலிருந்து பணிச் சான்று
 3. கடந்த மூன்றாண்டுகளுக்கான வருமான வரிதாக்கல் செய்த அறிக்கை
 4. கடன்தாரரின் ஆதார் அட்டை, வருமானவரி நிரந்தரகணக்கு எண் அட்டை மற்றும் குடும்ப அட்டைநகல்
 5. வங்கியால் கோரப்படும் இதர ஆவணங்கள்.
கட்டணங்கள்
 1. கடன் விண்ணப்ப பரிசீலனைக்கட்டணம்
 2. மதிப்பீட்டாளர் கட்டணம்
 3. வாகன்பக்க (Vahan) தேடுதல் கட்டணம் (ஏதுமிருப்பின்)
 4. வங்கியால் கோரப்படும் இதர கட்டணங்கள்.
பிணையம்
 1. வாகனம் (மகிழுந்து மற்றும் இரு சக்கரவாகனம்) வாங்கும் கடன்தாரர்கள் வாகனத்தை வங்கிற்கு அடமானம் (Hypothecation) செய்து தர வேண்டும்,
 2. வாகனம் கடன்தாரரின் பெயரில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவுச்சான்றின் (Registration Certificate) நகல்வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
 3. பதிவுச் சான்றில் வங்கிக்கு அடமானம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான பதிவுகள் இருக்கவேண்டும்.
 4. மேற்படி அடமானம், கடன் தொகை முழுவதுமாக திருப்பிச்செலுத்தப்படும் வரை இருக்கும்.
வாகனம் தொடர்பான நிபந்தனைகள்
 1. வண்டியின் தரம் மற்றும் தகுதிக்கு கடன்தாரரே முழுப்பொறுப்பாவார்.
 2. உரிய காலத்தில் வாகனம் வழங்கப்படுவதற்கு கடன்தாரரே முழுப்பொறுப்பாவார். காலதாமதத்திற்கு வங்கிநிர்வாகம் பொறுப்பேற்காது.
 3. வாகனத்திற்கு அளிக்கப்படும் உத்திரவாதத்தை கடன்தாரர் உறுதி  செய்து கொள்ளவேண்டும்.
 4. வாகனம் மற்றும் அதன் பாகங்கள் மோட்டார் வாகனச்சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய அமைப்பிடம் பதிவு செய்யப்படவேண்டியிருப்பின் கடன்தாரர் அதனை மேற்கொள்ளவேண்டும். அதற்கான சான்றிதழை வங்கிக்கு கடன்தாரர் அளிக்கவேண்டும்.
 5. வாகனம் மற்றும் அதன் பாகங்கள் தொடர்பாக வழங்கப்படும் வரிசை எண்களை விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது அளிக்கஇயலவில்லை எனில் வாகனம் பெற்றுக்கொள்ளப்பட்டவுடன் மேற்படி விவரங்களை வங்கிக்கு உரிய படிவத்தில் அளிக்கவேண்டும்.
 6. வாகனம் அல்லது அதன் பாகங்களை பிற வகையில் பாராதீனம் செய்தல் கூடாது
 7. கடன் தீரும் வரை வாகனத்தின் மீது முதன்மைப்பற்றுகை உரிமை வங்கிக்கு இருக்கும்.
 8. மாநில எல்லையைத்தாண்டி வாகனம் 60 நாட்களுக்கு மேல் இருக்க வேண்டிய சூழ்நிலையில் வங்கியிடம் உரிய விண்ணப்பத்தில் அனுமதி பெறுதல் வேண்டும்.
 9. வாகனம், அதன் பாகங்கள் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்களை வங்கி அலுவலர்கள் தேவைப்படும் நேர்வில் பார்வையிடவோ ஆய்வு செய்யவோ வங்கிக்கு உரிமை உண்டு.
 10. வாகனம் பராமரிப்பு மற்றும் இயக்கம் தொடர்பாக நடைமுறையிலுள்ள அனைத்து சட்டம் மற்றும் விதிகளை கடன்தாரர் முழுமையாக பின்பற்றுதல் வேண்டும்.
 11. வாகனத்தில் புதிதாகப்பொருத்தப்படும் பாகங்களுக்கு உரிய முன் அனுமதியைப்பெற வேண்டும். மேலும் அவை நடைமுறையிலுள்ள அனைத்து சட்டம் மற்றும் விதிகளின் படி இருப்பதை கடன்தாரர் உறுதி செய்தல் வேண்டும்.
இதர நிபந்தனைகள்
 1. கடன் அனுமதிக்கப்பட்ட பின் அச்சுரசீது, கொள்முதல் பில், விலைப்புள்ளி வழங்கிய  நிறுவனத்திடம் பெற்று வங்கியில் சமர்ப்பிக்கவேண்டும்.
 2. கடன் வழங்கிய பின்னர் வங்கிக்கு திருப்தி அளிக்காவிடில், தவணைக்கு முன்னதாக முழுத்தொகையும் வசூலிக்கவோ அல்லது கடன் மூலம் வாங்கப்பட்ட வாகனத்தை திருப்பி எடுத்துக்கொள்ளவோ வங்கிக்கு உரிமையுண்டு.
 3. கடன் முழுவதுமாக தீர்க்கப்பட்ட பின்னர் அடமானம் நீக்கித்தரப்படும்.
 4. கடன் தொகை முழுவதுமாக திருப்பிச்செலுத்துவதற்கு முன்பாக வாகனத்தை வேறு வகையில் விற்பனை செய்தல்கூடாது.
 5. வாங்கப்படும் வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படவேண்டும்.
 6. ஊதியம்/ஓய்வூதியம் பெறும் வங்கிக்கணக்கை வங்கிக்கு தெரிவிக்காமல் மாற்றுதல்கூடாது..
வரம்பு உயர்வு
 1. கடன்தாரர் கடன் தொகையில் 60 சதவிகிதத்தை எவ்வித தவணை நிலுவையின்றி திருப்பிச்செலுத்தியிருக்கும் பட்சத்தில், அவர் அந்தக்கடனில், ஏற்கனவே வழங்கிய உச்சவரம்பிற்குள் கடன் பெற விருப்பம் தெரிவித்தால், மேற்கொண்டு அவருக்கு அக்கடனை வரம்புஉயர்வு (top -up) செய்யும் வசதி உள்ளது.
 2. அவ்வாறு வரம்பு உயர்வு செய்யும்பட்சத்தில், ஏற்கனவே உள்ளகடன்  நேர் செய்யப்பட்டு, புதிதாக வழங்கப்படும்.
 3. வரம்பு உயர்வு செய்யப்பட்ட பின்னர், கடனைத்திருப்பிச செலுத்தும் காலம், வரம்பு உயர்வு செய்த நாளிலிருந்து 36 மாதங்களுக்கு மிகக்கூடாது.
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது