கடன் திட்டத்தின் பெயர் மகளிர் தொழில் முனைவோர் கடன் (Women Entrepreneurs)
கடன் தவணைக் காலம் 60 மாதங்கள் வரை
கடன் அதிகபட்சத் தொகை ரூ.50,000/- முதல் 10,00,000/- வரை
வட்டி விகிதம் 11.50%
கடன் பெற தகுதி பெற்றவர்கள்
 1. வங்கி விவகார எல்லையில் வசிக்கும் படித்த வேலையில்லாத மகளிருக்கு இக்கடன் வழங்கப்படும்.
 2. சிறு வாகன போக்குவரத்து கடன்கள் தவிர சிறு தொழில் பிரிவில் அடங்கிய அனைத்து சிறு தொழில்கள் மற்றும் சேவை மையங்கள் துவங்க கடன் வழங்கப்படும்.
 3. மனுதாரர் கோரும் தொழில் குறித்து குறைந்தபட்ச பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது 18 வயது முதல் 70 வரை.
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
 1. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
 2. மாவட்ட தொழில் மையத்தில் பெறப்பட்ட பதிவுச் சான்று
 3. கல்விச் சான்று
 4. அனுபவ சான்று
 5. புதியதாக துவங்கும் தொழில் குறித்து மாவட்ட தொழில் மையத்தில் பெறப்பட்ட தொழில் நுட்பச் சான்று
 6. ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல்
 7. நடப்புக் கணக்கு நகல்
 8. திட்ட மதிப்பீடு
 9. கடன்தாரர் மற்றும் பிணைதாரர் வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.
 10. கடன்தாரரும் பிணைதாரரும் ஒன்றாக சேர்ந்து கடன் உறுதி ஆவணம் அளிக்க வேண்டும்.
பரிசீலித்தல் கிளை உதவியாளர் / கிளை மேலாளர் விண்ணப்பத்துடன் இணைத்துள்ள ஆவணங்களை பரிசீலித்து ரூ.50,000/- வரை கிளை அளவிலும், ரூ.50,000த்திற்கு மேற்பட்டு கடன் மனுவை தலைமையகத்திற்கு பரிந்துரை செய்யப்படவும் வேண்டும். மேலும், கடன் விண்ணப்பங்கள் விடுதலின்றி முழுமையாக óh¦த்தி செய்யப்பட வேண்டும்.
மேலாளர் குறிப்பு உதவியாளர் / உதவி மேலாளர் பரிந்துரை செய்த விண்ணப்பத்தை கிளை மேலாளர் ஆய்வு செய்து பட்டுவாடா அனுமதிக்கலாம் (தேவைப்படின் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்)
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது