கடன் திட்டத்தின் பெயர் |
மாற்றுத் திறனாளிகள் கடன் (NHFDC) கிளை அளவில் அனுமதி
|
கடன் தவணைக் காலம் |
36 மாதங்கள் வரை |
கடன் அதிகபட்சத் தொகை |
சொத்து அடமானம் மீது அதிகபட்ச கடன் தொகை ரூ.10,00,000/- வரை |
வட்டி விகிதம் |
தவணைத் தேதிக்கு முன் செலுத்தபட்டால் 0% வட்டி. தவணை தேதிக்கு முன் தவணை தொகை பெறப்படும் பட்சத்தில் அதற்குரிய வட்டியானது தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு பெறப்படும். |
கடன் பெற தகுதி பெற்றவர்கள் |
ஊனத்தின் தன்மை 40% அதற்கு மேல் |
வயது |
18 வயது முதல் 70 வயது வரை (மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 14 வயது முதல் 70 வயது வரை) |
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
- மாவட்ட மறுவாழ்வு மையத்தால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்-2. UDID அட்டை நகல் -2.
- மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பம்
- மனுதாரரின் புகைப்படம் -2.
- மனுதாரரின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு
- மனுதாரரின் வருமானச் சான்று (கட்டாயமில்லை)
- பாதுகாவலர் கடிதம் (மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பார்வையற்றோர்களுக்கு மட்டும்)
- தொழில் / வியாபாரம் தொடர்பான புகைப்படம்.
|
ஜாமீன்தாரர் |
ரூ. 25,000/- வரை வழங்கப்படும் கடனுக்கு வங்கியில் இணை உறுப்பினராக உள்ள தனிநபர் ஜாமீன் ஒருவர் மட்டும் ரூ. 25,001/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படும் கடனுக்கு இருநபர் ஜாமீன் |
பங்குத் தொகை |
இல்லை |
வட்டி விகிதம் |
மாறுதலுக்கு உட்பட்டது |