கடன் திட்டத்தின் பெயர் நெசவாளர் முத்ரா கடன் (PMMY Loan to weavers)
கடன் தவணைக் காலம் 36 மாதங்கள்
கடன் அதிகபட்சத் தொகை ரூ:50,000/- (தனி நபர் ஜாமீன் அடிப்படையில் )
வட்டி விகிதம் 10.22 %
கடன் பெற தகுதி பெற்றவர்கள் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த விவகார எல்லையில் வசித்து வரும் நெசவாளர்கள் கடன் பெற தகுதியுடையவர்களாகின்றனர். நெசவாளர்களுக்கு அவர்கள் உறுப்பினராக உள்ள சங்க ஒப்புதலுடன் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற்று தவணை தவறாமல் உள்ளவர்கள் கடன் பெறுபவர்கள் மற்றும் பிணைதாரர்கள் வங்கியில் இணை உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மேல் கடன் பெறக் கூடாது மற்றும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் பிணைநிற்கக்கூடாது.
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் நெசவுத்தொழிலுக்கு நடைமுறை மூலதனகாரியத்திற்காக கடன் வழங்கப்படுகிறது.
வயது மனுதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் , மேலும் கோரும் பிரதான் மந்திரி முத்ரா கடனின் தவணைக்காலம் மனுதாரர் மற்றும் பிணைதாரருக்கு 70 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே அசல் மற்றும் வட்டியினை திருப்பி செலுத்தி கடனை முடிவு கட்டும் வகையில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. ஆளறிச்சான்றிதழ் , (மனுதாரர் மற்றும் பிணைதாரர்) மற்றும் முகவரிச்சான்று
  2. வருமானச்சான்று ,(மனுதாரர் மற்றும் பிணைதாரர்)
  3. சமீபத்திய புகைப்படம் , ( மனுதாரர் மற்றும் பிணைதாரர்)
  4. நெசவுத்தொழில் செய்வதற்கான சான்று
  5. நெசவுத்தொழில் புரியும் இடத்தின் புகைப்படம்
  6. இதர வங்கிகளில் கடன் நிலுவையில்லை சான்று
  7. உதவி இயக்குநரால் வழங்கப்படும் நெசவாளர் அடையாள அட்டை
பங்குத் தொகை இல்லை
ஆவணங்கள் பதிவேடு கடன் மனு கிளையளவிலேயேபராமரிக்கப்பட்டு வருகிறது.
விளிம்புத்தொகை மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும் முத்ரா கடன் தொகைகளில் 20% அதிகபட்சமாக ரூ.10,000/-வரை விளிம்புத்தொகையாக மத்திய அரசிடம் பெற்று கடன்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. முத்ரா கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி தொகைக்கு வட்டி மானியம் பெற்று வழங்கப்படுகிறது.