கடன் திட்டத்தின் பெயர் சம்பளக்கடன் (Salary Loan)
கடன் தவணைக் காலம் 7 வருடம் (84 மாதங்கள்) வரை (ஓய்வு பெறும் தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பே தவணைக் காலம் முடிவடைய வேண்டும்).
கடன் அதிகபட்சத் தொகை ரூ.7,00,000/-வரை
வட்டி விகிதம் 11 %
கடன் பெற தகுதி பெற்றவர்கள் அரசு மற்றும் அரசுசார்ந்த பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், அரசு நிதி உதவிப் பெறும் கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற தனியார் துறைநிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள்.
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் குடும்பச் செலவு
வயது 18 வயது முதல் ஓய்வு பெறும் வரை
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. ஒரு நபர் ஜாமீன் சம ஊதியம் பெறும் அதே துறையில் அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள்.
  2. விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன்தாரர் மத்திய வங்கியின் விவகார எல்லைக்குள் பணியாற்ற வேண்டும்.
  3. விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன்தாரர் வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.
  4. கடன் நிலுவை இல்லை என்ற சான்றிதழ் விண்ணப்பதாரர் தொடர்புடைய சிக்கன கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து பெறப்பட வேண்டும்.
  5. கடன் கோருபவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்ற உறுதி மொழி கடிதம் அளிக்க வேண்டும்
  6. கடன்தாரர் மற்றும் பிணைதாரர்களின் சம்பளப்பட்டுவாடா அலுவலரிடமிருந்து சம்பளத்திலிருந்து கடன் தொகையினை பிடித்தம் செய்து கொடுக்க உறுதி மொழி கடிதம் பெறப்பட வேண்டும்
  7. கடன்தாரர் மற்றும் பிணைதாரரிடம் ஒப்பந்த கடிதம் பெறப்பட வேண்டும்.
  8. கடன்தாரர் மற்றும் பிணைதாரரும் சேர்த்து கூட்டாக கடன் உறுதி ஆவணம் எழுதிக்கொடுக்க வேண்டும்.
  9. கடன்தாரர் மற்றும் பிணைதாரரின் அனைத்து பிடித்தங்கள் விவரத்துடன் சம்பளப் பட்டுவாடா அதிகாரியால் வழங்கப்பட்ட சம்பளச் சான்று பெறப்பட வேண்டும்.
  10. இக்கடனுக்கான பிடித்தமும் ஏற்கனவே பிடித்தம் செய்யப்படும் தொகையுடன் Credit Rate Report–இல் உள்ள கேட்பு தொகையையும் சேர்த்து மொத்தப் பிடித்தம் 75% -ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது