கடன் திட்டத்தின் பெயர் சுய உதவிக்குழு கடன் (SHG Loans)
கடன் தவணைக் காலம் 12/24/36/72 மாத தவணைகள்
கடன் அதிகபட்சத் தொகை நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1,00,000/-மும், குழுவிற்கு அதிகபட்சமாக ரூ. 20,00,000/- வரை
வட்டி விகிதம் 11.50%
கடன் பெற தகுதி பெற்றவர்கள் சேமிப்பு கணக்கு துவங்கி ஆறு மாதங்கள் நல்ல முறையில் வரவு செலவு செய்து வரும் சுய உதவிக் குழுவினர்
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் அனைத்து தொழில் / வியாபார காரியங்கள்
வயது 18 வயது முதல் 70 வரை (ஆண் /பெண்)
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. கடன் கோரும் குழுவின் தீர்மானம் நகல்
  2. குழுவின் கடைசி ஆறு மாத கால வங்கி வரவு செலவு அறிக்கை நகல்
  3. கடன் கோரும் குழு உறுப்பினர்களின் ஒவ்வொருவரின் இரண்டு ஆளறிச்சான்றுகள் ( பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு)
  4. சேமிப்பு நிலுவை குறித்த பொதுப்பேரேட்டின் நகல்
  5. மகளிர் திட்டம் மற்றும் கிளை மேலாளரால் தர மதிப்பீடு நிர்ணயம் செய்ய்பட்ட ( Grading) அறிக்கை.
  6. வங்கியால் வடிவமைக்கப்பட்ட கடன் விண்ணப்பங்கள், உடன்படிக்கை மற்றும் அனைத்து இணைப்புகள் (புரோ நோட் உட்பட) முழுவதும் விடுதலின்றி பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  7. கிளையில் விவகார எல்லையில் உள்ள தொ.வே.கூ.கடன் சங்கங்களின் மற்றும் வணிக வங்கிகளில் கடன் நிலுவையில்லா சான்று.
  8. CREDIT INFORMATION COMPANIES-களில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பூர்த்தி செய்யப்பட்ட Excel படிவம்
  9. குழுவின் தணிக்கை அறிக்கை, இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலை குறிப்பு.
  10. CRIF Score மிகக்குறைவாக இருக்கும்பட்சத்தில் அனுமதிக்கப்படும் கடன் தொகையினை, திருப்பி செலுத்தும் சக்தியினை கிளைமேலாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பங்குத் தொகை இல்லை