கடன் திட்டத்தின் பெயர் வீட்டுஅடமானக் கடன் (HML )
கடன் தவணைக் காலம் 10 வருடங்கள் வரை
கடன் அதிகபட்சத் தொகை ரூ.20,00,000/-வரை ( இடம் மற்றும் கட்டிட மதிப்பீட்டில் 60% )
வட்டி விகிதம் EMI / Simple 11.00 %
கடன் பெற தகுதி பெற்றவர்கள் செயல் எல்லையில் இருக்கும் நிலையான வருமானம் பெறும் தகுதி உள்ள நபர்கள்
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் பெருமளவு வியாபாரம் , சிறு வியாபாரம், பதிவு செய்யப்பட்ட புரோ நோட்டின் பேரில் பெற்ற முன் கடனை திருப்பி செலுத்துதல், வீடு பெருமளவு பழுது பார்த்தல் / புதுப்பித்தல், மகன், மகள் திருமண காரியம் , குடும்பத்தில் உள்ள உறுப்பினருக்கு மருத்துவ சிகிச்சை.
வயது 18 வயது முதல் 70 வரை (கடன்தாராரின் கடனின் தவணை முடியும் பொழுது 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.)
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. பத்திரம் மற்றும் மூல பத்திரங்கள்
  2. 15 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று
  3. மனையிடத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு மற்றும் வங்கி அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடம் பெறப்பட்ட கட்டிட மதிப்பீட்டு சான்று
  4. உள்ளாட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கட்டிட அனுமதி மற்றும் வரைபட அங்கீகாரம்
  5. வங்கியால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் சட்ட கருத்துரை
  6. Credit Information Companies ல் விண்ணப்பத்தாரின் CIBIL score மற்றும் முன் கடன் குறித்த விவரங்கள்
  7. இருப்பிட சான்றிதழ்
  8. வருமானச் சான்றிதழ்
  9. அங்கீகரிக்கப்பட்ட இடம் மற்றும் வீட்டு வரைபட ஒப்புதல்
  10. வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை
  11. வருமான வரி தாக்கல் அறிக்கை அல்லது படிவம் 16
  12. கடன் செலவுக்குண்டான மதிப்பீட்டு அறிக்கை
  13. சொத்து வரி, வீட்டு வரி, மின்கட்டணம் , மற்றும் குடிநீர் கட்டண ரசீது
  14. நிலையான வருமானம் குறித்து ஆவண ஆதாரங்களுடன் கிளை மேலாளார்களின் பாரிந்துரை கடிதம்
  15. அடமானம் வைக்கப்படும் வீட்டின் முன்பு விண்ணப்பதாரர் மற்றும் கிளை மேலாளார் அடங்கிய புகைப்படம்.
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது