கடன் திட்டத்தின் பெயர் வாகனக் கடன்( Vechile Loan)
கடன் தவணைக் காலம் 54 மாதங்கள்
கடன் அதிகபட்சத் தொகை ரூ.6,00,000/- வரை
வட்டி விகிதம் 13%
கடன் பெற தகுதி பெற்றவர்கள்
  1. வங்கி கிளையின் விவகார எல்லையில் குடியிருக்க வேண்டும்.
  2. உரிய ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
  3. போதிய திருப்பி செலுத்தும் சக்தி உடையவராக இருக்க வேண்டும்.
கடன் பெற தகுதியுள்ள காரியங்கள் சொந்த உபயோகத்திற்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  1. Demand Promisary Note
  2. Conforming Security Letter
  3. Letter of lien and set off
  4. Letter of Guarantee
  5. Proforma Invoice (Quotation)
  6. Driving License
  7. புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, வயதுச்சான்று மற்றும் முகவரிச்சான்று
  8. ஜாமீன்தாரர் அடையாளச்சான்று, வயதுச்சான்று மற்றும் முகவரிச்சான்று (இருசக்கர வாகனக்கடன் மட்டும்)
  9. வருமானச்சான்று மனுதாரர் /ஜாமீன்தாரர் (இரு சக்கர வாகனக்கடன் மட்டும்)
  10. அடமானச்சொத்து விபரம் (கார் வாங்கும் கடனுக்கு மட்டும்.)
  11. புதிய வாகனம் வாங்குவோருக்கு மட்டுமே இவ்வகை கடன் அனுமதிக்கப்படும்.
  12. வாகனம் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து அல்லது அங்கீகாரம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து புரபார்மா இன்வாய்ஸ் 3 பிரதிகள் பெற்று கடன் கோருபவர் கையொப்பத்துடன் கடன் மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  13. கார் / இருசக்கர வாகனம் வாங்க வாகனத்தின் மொத்த தொகையில் 75% அளவிற்கு உட்பட்டு ரூ.6,00,000/- வரை கடன் அனுமதிக்கப்படும். மீதி 25% அளவிற்கான தொகையை கடன் கோருபவரே சொந்த நிதியாக ஏற்க வேண்டும். இதை வங்கியில் முன்னதாக செலுத்த வேண்டும். கடன் தொகை மற்றும் கடன்தாரர் செலுத்தும் சொந்த நிதி இரண்டையும் சேர்த்த ப்ரொபார்மா இன்வாய்ஸ் கொடுத்த நிறுவனத்திற்கு டிராப்ட்/ பே ஆர்டர் மூலம் வங்கியே நேரடியாக வழங்கும்.
  14. கார் வாங்க கடன் கோருபவர்கள் கடன் தொகை அளவிற்கு மதிப்புள்ள சொத்தை ஈடு கொடுக்க வேண்டும்
  15. இரு சக்கர வாகனம் வாங்க கடன் கோருபவர்கள் வங்கி ஏற்றுக் கொள்ளக் கூடிய ரூ.7500/- க்கு குறையாத மாத சம்பளம் பெறும் இரு நபர்கள் ஜாமின் அளிக்க வேண்டும்.
  16. கடன் கோருபவர் சொத்தை ஈடு கொடுப்பதுடன் / ஜாமீன் நிற்பதுடன் வாங்க போகும் வாகனத்தை வங்கிக்கு Hypothication செய்து கொடுக்க வேண்டும்
  17. கடன் கோருபவர் வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.
பங்குத் தொகை இல்லை
வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது