விருதுகள்

  1. 2015-16 ஆம் ஆண்டு சேலத்தில் 20.11.2015 அன்று நடைபெற்ற 62-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் மாநில அளவில் சிறந்த வங்கிக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
  2. 2017-18 ஆம் ஆண்டு சென்னையில் 27.02.2018 அன்று நபார்டு வங்கி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் விவசாய கடன் அட்டைகள் வழங்குதலில் சிறந்த செயல்திறனுக்கான மாநில அளவிலான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
  3. 2018-19 ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களின் கணக்குகளில் ஆதார் மற்றும் கைப்பேசி எண் இணைப்பில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது நபார்டு வங்கியால் வழங்கப்பட்டது.
  4. 2019-20 ஆம் ஆண்டிற்கு நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நபார்டு வங்கியால் தமிழக அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
  5. 21.08.2019 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆய்வுக் கூட்டத்தில் மாநில அளவில் சிறந்த செயல்பாடுகளுக்கான கேடயம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
  6. நபார்டு வங்கியின் 40-ஆவது “Foundation Day” விழாவில், நமது வங்கிக்கு மாநில அளவில் சிறந்த செயல்பாடுகளுக்கான ((Financial and Developmental initiatives) விருது 13.07.2021 அன்று நபார்டு வங்கியினரால் வழங்கப்பட்டது.
  7. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சேவை செய்தமைக்காக தமிழக அளவில் நடைபெற்ற 75-ஆவது இந்திய சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
  8. 2020-21-ஆம் ஆண்டிற்கு நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நபார்டு வங்கியால் தமிழக அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
  9. 2021-22-ஆம் ஆண்டிற்கு நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நபார்டு வங்கியால் தமிழக அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.