வங்கித் தோற்றம்
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 11-07-1980 அன்று பதிவு செயப்பட்டு 03-02-1982 முதல் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் 28 கிளைகளுடனும், திருப்பூர் மாவட்டத்தில் 8 கிளைகளுடனும் செயல்பட்டு வருகிறது. தலைமையகம் உட்பட மொத்தமுள்ள 36 கிளைகளில் 23 கிளைகள் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.