விவசாயமல்லாத கடன் பிரிவு
விவசாயமல்லாத கடன் பிரிவு முக்கிய செயல்பாடுகள்
- விவசாயமல்லாத கடன் மனுக்களை பரிசீலித்து, வழக்கறிஞர் கருத்துரை பெற்று கடன் அனுமதிக்கு சமர்ப்பித்தல்.
- பங்குகள் ஒதுக்கீடு சரிபார்த்து பங்குத் தொகை மாற்றம் செய்தல்.
- விவசாயமல்லாத கூட்டுறவு சங்கங்களின் காசுக்கடன் மனுக்களைப் புதுப்பித்தல்.
- பங்கு ஈவு பராமரித்தல் மற்றும் அரசுக்கு திருப்பிச் செலுத்துதல்.
- புதிய உறுப்பினர்கள் சங்கங்களை உறுப்பினராகச் சேர்த்தல்.
- உறுப்பினர் சங்கங்கள் மத்திய வங்கியில் செலுத்தும் சேம நிதி பராமரித்தல்.
- தள்ளுபடி மானியக்கடன் மனு, சான்றிதழ் கடன் மனு பரிசீரிலித்து அனுமதிக்கு சமர்ப்பித்தல்.
- மேற்பார்வையாளர் காலாண்டு ஆய்வு அறிக்கை பெற்று பரிசீலித்து பார்வைக்குச் சமர்ப்பித்தல்.
- விவசாயமல்லாத கூட்டுறவுச் சங்கங்களில் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு ஆகிய இரண்டு பரிசோதனைகளை மேற்பார்வையாளர்கள் மூலம் மேற்கொண்டு அறிக்கை பெற்று சமர்ப்பித்தல்.
- கோ-ஆப் டெக்ஸ் நிலுவை மற்றம் தள்ளுபடி மானிய நிலுவைக்கு உறுதிச் சான்று பெற்று மாதாந்திர மற்றும் காலாண்டுக்கு தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அறிக்கை அனுப்பி வைத்தல்.
- நெசவாளர் கூட்டுறவு சங்களுக்கு காசுக்கடன் மற்றும் கடன் அட்டை கடன்களுக்கு வட்டி மானிய கோரிக்கை, RRR Package தொகை, 20 சதவீத விளிம்புத் தொகை பெற சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு கோரிக்கை அனுப்பி வைத்தல்.
- நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள ஜவுளி இருப்பு உடமைகளுக்கு மாஸ்டர் பாலிஸி எடுத்து காப்பீடு செய்தல்.
- கலைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வரவேண்டிய தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுத்தல்.
- தலைமையக வங்கியியல் பிரிவு மற்றம் கிளைகளில் கடன் வழங்குதலில் முன்னேற்றம் எய்திட குறியீடு நிர்ணயம் செய்தல்.
- கிளைகளில் வழங்கப்படும் கடன்களின், கடன்,வசூல் மற்றும் தவணை தவறியது போன்ற விபரங்கள் பெறப்பட்டு பரிசீலித்தல். மேலும், பதிவாளர் அலுவலகம், நபார்டு வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகம்; ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தல்.
- கிளைகளில் வழங்கப்படும் நேரடிக் கடன்கள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தல்.
- முதலமைச்சர் தனிப்பிரிவு மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலக GTP Petition மற்றும் இணைப்பதிவாளர் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபருக்கு பதிலளித்தல்.
மகளிர் வளர்ச்சி
மகளிர் வளர்ச்சி பிரிவு முக்கிய செயல்பாடுகள்
வங்கியில் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு 04.10.2010 முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் வங்கியின் தலைமையகம் மற்றும் இதர கிளைகள் மற்றும் கிளைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 227 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கீழ்க்கண்ட கடன் தொடர்பான கோப்புகள் மற்றும் கடன் அனுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.
I. கடன் வகைகள்
- சுய உதவிக்குழுக் கடன்
- மாற்றுத் திறனாளிக் கடன்
- டாப்செட்கோ கடன் (தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்)
- டாம்கோ கடன் (தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்)
- தாட்கோ கடன் (தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்)
- பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு (மத்திய காலக் கடன்)
II.கடன் பெறுதல் மற்றும் பிரிவு அளவில் பராமரிக்கப்படும் கடன் கணக்குகள் விபரம்
- ரூ.50000/- வரையிலான மாற்றுத்திறனாளி கடன் தொகைக்கான கடன் மனு பெற்று கிளை மற்றும் சங்கத்திற்கு தலைமையகம் மூலம் கடன் அனுமதித்து பின்னர் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மூலம் மறுநிதி உதவி பெறுதல்.
- ரூ.50000/-க்கு மேற்பட்ட கடன் தொகைக்கு இரு கடன் மனுக்கள் பெறப்பட்டு அதில் ஒரு கடன் மனுவினை தலைமையக பரிந்துரையுடன் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி நிதியுதவி பெறப்பட்டு சம்மந்தப்பட்ட கிளை/சங்கங்களுக்கு கடன் அனுமதித்தல்.
- டாம்கோ மற்றும் டாப்செட்கோ நிறுவனத்திடமிருந்து கடன் நிதியுதவி பெற்று கிளை மற்றும் சங்கங்களுக்கு கடன் தொகை அனுமதித்தல்.
- கிளைகளிடமிருந்து பெறப்படும் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன் தொகைக்கான கேட்புத் தொகையினை சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்துதல்.
- வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு சுய உதவிக்குழுக் கடன், மாற்றுத் திறனாளிக் கடன், டாம்கோ கடன் மற்றும் டாப்செட்கோ கடன் போன்ற கடன்களுக்கு பதிவாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர், இணைப்பதிவாளர் அவர்களால் நிர்ணயிக்கப்படும் குறியீட்டினை வங்கிக் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு தொடர்றுத்துதல்.
- கிளைகள் மூலம் வழங்கும் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன்களுக்காக தனி நபர் மற்றும் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற்று அனுப்பப்படும் ‘அ’ படிவத்தினை வங்கியின் தீர்மான நகலுடன் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு கூர்ந்தாய்வுக் குழுக் கூட்டத்திற்கு அனுப்புதல்.
- கிளைகள் மற்றும் சங்கங்கள் மூலம் டாம்கொ கடன்களுக்காக தனி நபர் மற்றும் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற்று அனுப்பப்படும் ‘அ’ படிவத்தினை வங்கி/சங்கத்தின் தீர்மான நகலுடன் மேலாண்மை இயக்குநர் டாம்கோ சென்னைக்கு அனுப்புதல்.
- 01.04.2011 முதல் வழங்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளி கடன்களில் முறையாக திருப்பி செலுத்தப்படும் கடன்களுக்கு கிளை மற்றும் சங்க அளவில் வட்டி மானியக் கோரிக்கையினை தொகுத்து தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வட்டி மானியம் பெற்று சம்பந்தப்பட்ட கிளை/சங்கங்களுக்கு வழங்குதல்.
- மேற்படி கடன்கள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு கிளை அளவில் பெறப்படும் கோப்பினை பரிசீலித்து துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வங்கியின் தீர்மான நகலுடன் அனுப்பி வைத்தல்.